பொது வெளியில் மலம் கழித்தால் ரேஷன் அட்டை ரத்து - கிராம பஞ்சாயத்து அதிரடி

." alt="" aria-hidden="true" />


திறந்தவெளியில் மலம் கழிக்கும் சுகாதாரமற்ற பழக்கத்தை ஒழிக்க மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஜரன்டி என்ற கிராம பஞ்சாயத்து அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்து உள்ளது.

இதன்படி யாராவது திறந்தவெளியில் மலம் கழிப்பது கண்டறியப்பட்டால் அந்த குடும்பத்தின் ரேஷன் அட்டையை ரத்து செய்யவும், திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களை புகைப்படம் எடுத்து அனுப்புபவர்களுக்கு வரி சலுகை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. கிராமசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுபற்றி ஜரன்டி பஞ்சாயத்து தலைவர் சமாதன் தாயடே கூறுகையில், “ஜரன்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள. அனைவரது வீட்டிலும் போதிய தண்ணீர் வசதியுடன் கழிவறைகள் உள்ளது. ஆனாலும் பலர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதில் தான் ஆர்வமாக இருக்கிறார்கள். குறிப்பாக சாலையோர பகுதிகள் அதிகளவில் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் சுகாதாரமற்ற பழக்கத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது'' என்றார்