" alt="" aria-hidden="true" />
பொங்கல் பரிசு தொகுப்புடன் பொங்கல் பானையை அரசு இலவசமாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பொங்கலுக்கு புத்தம் புதிய பானை அடுப்பில் பொங்கல் வைப்பது வழக்கம். சில்வர், அலுமினிய பாத்திரங்களின் வருகை, மேலும் கேஸ் அடுப்பு, எலக்ட்ரிக் ஸ்டவ் அடுப்புகள் ,அடுத்தடுத்து வந்து விட்டதால் மண்பாண்ட தொழிலாளர்களின் நிலைமை படிப்படியாக பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மண் அடுப்புகளின் பயன்பாடு நகர்ப்புறங்களில் முற்றிலும் காணாமல் போய் விட்டது.கிராமப்புறங்களில் மட்டுமே இன்னமும் பலர் மறக்காமல் புத்தம்புது மண்பானை, அடுப்புகளில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். விலைவாசி உயர்வு, உற்பத்தி செய்த பொருளுக்கு ஏற்றவிலை கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் இப்பகுதியில் மண்பாண்டத்தொழில் செய்து வந்த பலர், அதனை விட்டு விட்டு வெளிநாடுகளுக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
ஏரியிலிருந்து களிமண் கொண்டு வந்து சுத்தமாக சலித்து, பிசைந்து சக்கரத்தில் வைத்து சுழற்றிச்சுழற்றி தங்கள் கை வண்ணங்களில் பானைகளை உருவாக்குகின்றனர். அதே போல் ஏரி களிமண், தோப்பு மனை மண், மணல், வைக்கோல் சேர்த்து குழைத்து செய்து காயவைத்து, சூளையில்சுட்டு அடுப்புகள் தயாரிக்கப்படுகிறது.
உலோக பாத்திரங்களால் சமைத்து சாபிடுவதை விட மண்பாண்டங்களை கொண்டு சமைத்து சாப்பிடுவதால் உலகம் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவதோடு, எந்த நோய்களின் தாக்கம் இருக்காது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தற்போது தமிழக அரசின் சார்பில் ரூ.1000 த்துடன் இணைந்து பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது.
அதோ போன்று நெசவாளர்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் விலையில்லா வேட்டி, சேலையும் அரசு வழங்கி வருகிறது. பொங்கல் வைக்க பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை விலையில்லாமல் வழங்கும் தமிழக அரசு. பொங்கல் வைக்க தேவையான பானையை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவது ஏன்?. மண்பாண்ட தொழிலை செய்து வரும் பல லட்சம் தொழிலாளர்களை தமிழக அரசு காக்க வேண்டுமெனில், பொங்கல் பரிசு தொகுப்போடு இணைந்து மண் பானையையும் அரசு வழங்கி, நசிந்து வரும் மண்பாண்ட தொழிலையும் , தொழிலாளர்களையும் காக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என கூறி உள்ளார்